இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வேட்டியை உருவி நாற்காலி வீசி கொல வெறி பைட்... கூட்டுறவு சங்க பதவிக்கு நடந்த தரமான சம்பவம்!!
பழனியில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையோருவர் அடித்துக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையோருவர் அடித்துக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேளாண்மை பொறியியல் பணிக் கூட்டுறவு மையத்தில் காலியாக உள்ள 2 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கும் நாளில் பதற்றம் தொற்றிக்கொண்டது. தேர்தல் அதிகாரி எடப்பாடி கோஷ்டிக்கு ஆதரவாக செயல்பட முயற்சி செய்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறிவிட்டது. இதனால் ஒருவரையோருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்ட அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைந்துவிட்ட நிலையில், அரசின் முக்கிய முடிவுகளை எடப்பாடியே எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஓ.பி.எஸ். முகாமில் தொடர்ந்து நிலவுகிறது. இதனால், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து பனிமோதல் நீடித்து வருவகிறது. இந்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே பல்வேறு இடங்களில் மோதிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.