காலை 10 மணிக்குத் தொடங்கிய ஜனாதிபதி தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

இந்திய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் வாக்குப் பதிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன் போன்றோர் வரிசையாக வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக இரு அணியின் எம்எல்ஏக்களும் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இதைனத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இன்று மாலை 3 மணிக்குள் வாக்குப் பதிவு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.