Asianet News TamilAsianet News Tamil

என்ஜி. அட்மிஷன் ஆரம்பம்… இதோ பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி… வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

Engineering admission date
Author
Chennai, First Published Sep 22, 2021, 8:08 AM IST

சென்னை: தமிழகத்தில் என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

Engineering admission date

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். அடுத்தபடியாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எப்போது கவுன்சிலிங் தொடங்கும் என்று தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, வரும் 27ம் தேதி முதல் பொதுப்பிரிவு மணவர்களுக்கான என்ஜினியரிங் அட்மிஷன் ஆரம்பமாகிறது. இந்த கவுன்சிலிங் ஆன்லைனில் நடக்கிறது.

சரி.. கலந்தாய்வு எப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு ஒரு டிப்ஸ். இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடக்கிறது என்பதால் முதல்கட்டமாக கலந்தாய்வு கட்டணம் செலுத்திவிட்டு பின்னர் விருப்பமான கல்லூரிகள் செலக்ட் செய்யவும், தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், உறுதி செய்தற்கும் கால அவகாசம் தரப்படுகிறது.

Engineering admission date

மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இந்த விவரங்கள் அனைத்தும் கல்லூரிகளின் திறன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் 2020ம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் செமஸ்டர் தேர்வு முடிவுகள், பின்னர் நவம்பர், டிசம்பர் செமஸ்டர் தேர்வு முடிவுகள் அடிப்படையாக கொண்டு தரவரிசைப்பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் தரவரிசையில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற கல்லூரிகள், ஒரு மாணவர் கூட பாஸாகாத கல்லூரிகளின் விவரங்களும் இடம்பெற்று உள்ளன. மாணவர்கள் இந்த விவரங்களை பயன்படுத்தி தெரிந்து கொண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios