Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் அதிரடியாக களம் இறங்கிய அமலாக்கத்துறை.! 15 இடங்களில் திடீர் சோதனையின் பின்னனி என்ன.?

பிரபல ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  
 

Enforcement Directorate raids 15 locations belonging to export company in Chennai
Author
First Published Aug 10, 2023, 11:06 AM IST

ஏற்றுமதி நிறுவனம் மோசடி

கடல் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறி, பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஏற்றுமதி நிறுவனம், தேசிய மாயமாக்கப்பட்ட வங்கிகளில் 225. 15 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.  

வங்கியில் கடன் பெற்ற ஆவணங்கள், மற்றும் ஏற்றுமதி செய்த பொருட்கள் மதிப்பு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது அடித்து சென்று விட்டதாக ஏற்றுமதி நிறுவனம் கூறியிருந்தது. இதனையடுத்து எஸ்பிஐ, ஐடிபிஐ, ஐசிஐசிஐ மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தது. 

Enforcement Directorate raids 15 locations belonging to export company in Chennai

சோதனையில் அமலாக்கத்துறை

புகாரின் அடிப்படையில் சிபிஐ பொருளாதார குற்றபிரிவு மற்றும் மத்திய புலனாய்வு துறை அமைப்பு ஏற்கனவே இந்த நிறுவனத்தில் சோதனைகள் நடத்தி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.  இந்தநிலையில் சென்னை மேற்கு தாம்பரம் சோழிங்கநல்லூர் வேளச்சேரி பெருங்குடி சூளைமேடு கோடம்பாக்கம் தியாகராய நகர் நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை சூளைமேட்டில் உள்ள அப்துல்லா தெருவில் நிறுவனத்தின் உரிமையாளரான ஜேம்ஸ் வால்டர் ஆரோக்கியசாமி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

இதையும் படியுங்கள்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மாயம்; காவல்துறை விசாரணை

Follow Us:
Download App:
  • android
  • ios