Asianet News TamilAsianet News Tamil

4 பேரை கொன்ற காட்டு யானை பிடிபட்டது - மயக்க ஊசி போட்டு வனத்துறை நடவடிக்கை

elephant killed 4 people caught by forest officers
elephant killed 4 people caught by forest officers
Author
First Published Jun 2, 2017, 2:03 PM IST


கோவை போத்தனூர் அருகே 4 பேரை கொன்றுவிட்டு சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.  

கோவை- கணேசபுரத்தை சேர்ந்தவர் ஜோசியர்  விஜயகுமார். இவரது மகள் காயத்ரி. இருவரும் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டு யானை காயத்ரியை தாக்கியது. . இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

அப்போது காயத்ரியை காப்பாற்ற முயன்ற விஜயகுமாரை யானை தூக்கி வீசியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

elephant killed 4 people caught by forest officers

இதையடுத்து யானையை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்ற பழனிச்சாமி என்பவரையும் யானை தாக்கியது. அதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் பகுதியில் நுழைந்த காட்டு யானை எதிரில் வருவோரை எல்லாம் தாக்கியது. இதில் ஜோதிமணி, நாகரத்தினம் ஆகியோர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை காடுக்குள் விரட்டியடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

elephant killed 4 people caught by forest officers

இதையடுத்து அந்த காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் மயக்க ஊசி செலுத்தி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டன.

அதன்படி தற்போது யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் யானையை பிடித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios