மதுரையில் மின் திருட்டு குறித்து புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மின் திருட்டில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 42 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

electricity power theft in madurai division

மதுரை மண்டலத்தில் தொடர் மின் திருட்டு நடைபெற்று வந்த நிலையில், மதுரை மண்டல செயற்பொறியாளர் பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் டவுன், சின்னாளப்பட்டி, பழனி, நெய்க்காரப்பட்டி, சுவாமிநாதபுரம், நத்தம், கள்ளிமந்தயம், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.

இந்திய முப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்... அறிவித்தது மத்திய அரசு!!

மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், வாடிக்கையாளர்களிடம் ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 886 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.55 ஆயிரம் அபராதம் செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.7 லட்சத்து 97 ஆயிரத்து 886 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்"  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுப்பு கிடைக்காததால் நின்ற மகளின் நிச்சயதார்த்தம்..! எஸ் ஐக்கு வருத்தம் தெரிவித்து டிஜிபி கடிதம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios