electricity department workers announced one day strike

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். 

வரும் ஜனவரி 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் மின்ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ஜனவரி 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். 

ஜனவரி 23ஆம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் அனைவரும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.