கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 26-ம் தேி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அந்த வகையில், உரிய ஆவணங்களின்றி ரூ.50,000க்கு மேல் பணத்தை வாகனத்தில் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 550 குழுக்கள் (8 மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம்) என மொத்தம் 1,650 எண்ணிக்கையில் பறக்கும் படை இயங்கி வருகிறது. பறிமுதல் செய்யப்படும் பணம் முழுவதும் நீதிமன்றத்தின் உத்திரவின்படி கருவூலத்தில் செலுத்த வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலக நேரத்திற்கு பின்பும், விடுமுறை நாட்களிலும் கருவூலத்தில் செலுத்துவதற்கு கருவூல அலுவலகத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பறக்கும் படை அமைத்துள்ளார். இந்நிலையில் ஓசூர் மாநகராட்சி முழுவதும் பறக்கும்படை சோதனை நடத்தி வருகின்றனர்.ஒசூர் மாநகராட்சியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெனிஃபர் மற்றும் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தர்கா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது காரில் ரோஹித் மற்றும் மித்லேஷ் ஆகிய இருவரிடம் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் காரில் இருந்து உரிய ஆவணம் இன்றி ரூ. 25 லட்சத்தை கொண்டு சென்றதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இதனையடுத்து வருமானவரித்துறை அலுவலரிடம் பறிமுதல் செய்த ரூ.25 லட்சம் ரொக்கத்தை ஒப்படைத்தனர். ஓசூரை சேர்ந்த தொழில் அதிபர் பாக்கிய குமார் என்பவர் பர்கூர் பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார். அவருடைய உதவியாளர்கள் ஆனேக்கல் பகுதியில் பணம் வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்துவதற்காக வீட்டிற்கு கொண்டு வரும் போது பறிமுதல் செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.