நடைபெற உள்ள 3 தொகுதிகளுக்கான இடை தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய, தமிழக தேர்தல் ஆணையர் லக்கானி டெல்லி சென்றார்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்குகான இடை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, மேற்கண்ட 3 தொகுதிகளிலும், தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று முன்தினம் முதல், மேற்கண்ட தொகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பணப்பட்டுவாடா முழுமையாக தடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் கண்காணிப்பு குழு, வரும் 3ம் தேதி இடைதேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு வர இருப்பதாக, தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். அதில், தலா 2 பேர் என 3 தொகுதிகளுக்கு, 6 பேர் வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது, பணப்பட்டுவாடாவை தடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தேர்தல் சம்பந்தப்பட்ட தொகுதிகளிர்ல பணியாற்றும் கண்காணிப்பாளர்களின், ஈடுபாடு குறித்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரியிடம் பேசுவதற்காக, ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றுள்ளார்.