election commission announced karan sinha is the new commissioner
சென்னை மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக கரன்சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டதை அடுத்து புதிய ஆணையராக யாரை நியமிக்கலாம் என்ற பரீசலனையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே தமிழக அரசு அனுப்பிய பெயர் பட்டியலில் சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.ஐ.ஜி.யாக இருக்கும் கரன்சின்ஹாவை ஆணையராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான அரசாணையும் மத்திய உள்துறை செயலாளர் நிரஞ்ச் மார்டிக்கு நேற்றே அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையராக கரன்சின்ஹா நியமிக்கப்படுவார் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
