அரியலூர்

ஏ.கே.எம். ஐ.ஏ.எஸ் அகதெமி ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி அசத்தலாக பேசி மாணவர்களுக்கு அறிவுரையை அள்ளி வீசினார்.

அரியலூரில் ஏ.கே.எம். ஐ.ஏ.எஸ் அகதெமி ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு ஏ.கே.எம் ஐ.ஏ.எஸ் அறக்கட்டளையின் நிறுவனர் கதிர் கணேசன் தலைமை வகித்தார். பேராசிரியர் செல்வசுந்தரம் வரவேற்றார்.

இதில், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது:

“மாணவப் பருவத்தில் அனைவரும் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

வெற்றி இலக்கை அடைய விரும்புபவர்கள் முதலில் தங்கள் மீது நம்பிக்கை வைத்து இலட்சியத்தை உருவாக்க வேண்டும், பிறகு தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி, குறிக்கோளை அடைய முழு மூச்சாக செயல்பட வேண்டும்.

அப்போதுதான் நாம் நினைத்ததுபோல், மருத்துவராகவோ, ஆட்சியராகவோ, காவல்துறை அதிகாரியாகவோ என பல்வேறு உயர் பதவிகளை அடைந்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்த்து சேவை செய்ய முடியும்” என்று பேசினார்.

இதில் ஏ.கே.எம் ஐ.ஏ.எஸ் அறக் கட்டளையின் நிர்வாகிகள் ராமசாமி, முத்தமிழ்ச்செல்வன், ராஜசேகர், சுதாகர், பத்மாவதி, கலையரசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவின் முடிவில் ராமசெல்வம் நன்றித் தெரிவித்தார்.