நாமக்கல்

மோகனூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எட்டாம்ம் வகுப்பு மாணவி சிகிச்சைப் பலனளிக்காததால் பரிதாபமாக உயிரிழனதார். டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? என்று கண்டரிய இரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி ஊராட்சி, ரெட்டையாம்பட்டி குறவர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் ஒரு பெயிண்டர். இவருடைய 2-வது மகள் நயன்தாரா (12). வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு நயன்தாராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாள். காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாள்

ஆனால், சிகிச்சைப் பலனளிக்காததால் நேற்று அதிகாலை நயன்தாரா பரிதாபமாக உயிரிழந்தாள். நயன்தாராவின் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே அவளுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததா? என தெரியவரும் என மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவி காய்ச்சலால் இறந்ததையொட்டி ரெட்டையாம்பட்டி பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்களுக்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.