தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த எட்டு மாட்டு வண்டிகளை வட்டாட்சியர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நெய்வேலி தென்பாதி கிராமம் அருகே அக்னியாற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது என்ற தகவல் வட்டாட்சியருக்கு கிடைத்தது.

அதன்பேரில், ஒரத்தநாடு வட்டாட்சியர் ரமேஷ் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார், அப்போது, அனுமதியின்றி திருட்டுத்தனமாக எட்டு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த எட்டு மாட்டு வண்டிகளையும் வட்டாட்சியர் பிடித்து, ஐந்து மாட்டு வண்டிகளை திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திலும், மூன்று மாட்டு வண்டிகளை வாட்டத்திக்கோட்டை காவல் நிலையத்திலும் ஒப்படைத்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து யாருக்காக மணல் கடத்தப்பட்டது? இதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டு உள்ளனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர் காவலாளர்கள்.