உங்கள் குழந்தைக்கு தமிழில் பெயர் வச்சுருக்கீங்களா? அப்போ இதை படிங்க... மா.சுப்ரமணியனின் சூப்பர் அறிவிப்பு!!
தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அக்க்ஷய பாத்திரம் என்கிற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒரு சில பள்ளிகளுக்கு மட்டும் காலை உணவு திட்டத்தை வழங்கிய நிலையை மாற்றி, தற்போது தமிழக அரசு மாநிலம் தழுவிய அளவிற்கு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: “சீனாவை முந்த வேண்டும்.. உலக அளவில் தமிழ்நாடு தலைநிமிர வேண்டும் ! முதல்வர் ஸ்டாலின் பேச்சு !!”
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. அடுத்த ஆறு மாதத்தில் விழா ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு குழந்தைகளுக்கான கல்வி கட்டணமும் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதையும் படிங்க: திடீரென அரசுப்பள்ளிக்கான மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள் - மாணவர்கள் அவதி
காலை சிற்றுண்டியாக கிச்சடி, உப்புமா, பொங்கல் வழங்கப்பட்டு வரும் சூழலில் மாணவர்கள் சாம்பார் வழங்க வேண்டும் என விடுத்துள்ள கோரிக்கை, விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற 285 கர்ப்பிணி பெண்களின் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துக்கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், பூ, பழம் மஞ்சள், கண்ணாடி, தட்டு, கையேடு அடங்கிய வரிசை தட்டுகளை வழங்கினார்.