தூத்துக்குடி

ஆசிரியர் கலந்தாய்வில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று தூத்துக்குடியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற.

இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த கணேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மன்ட் சிறப்புரை ஆற்றினார்.

இந்தக் கூட்டத்தில், "புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்த வேண்டும்,

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை 20 சதவீத தொகையை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் செல்லையா, மகளிரணிச் செயலர் ஜேனட் பொற்செல்வி, நிர்வாகிகள் பூசைத்துரை, ஜெயராஜ், தேவசகாயம், ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.