edappadi palanisamy transferred ips officers
ஆர் கே நகர் தேர்தலை ஒட்டி காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜார்ஜ் உட்பட 19 ஐ பி எஸ் அதிகாரிகளுக்கு பணியிடம் வழங்கி உத்தரவிடபட்டுள்ளது.
ஆர்.கே. இடைதேர்தல் கடந்த ஏப். 12 நடப்பதாக இருந்தது இதையொட்டி சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் கூடுதல் ஆணையர் எம்.சி சாரங்கன், இணை ஆணையர் ஜோஷி நிர்மல்குமார்.
துணை ஆணையர்கள் ஜெயக்குமார் செல்வகுமார் உள்ளிட்டோர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கூவத்தூரில் தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கபட்டிருந்த எம்எல்ஏக்களை ஆய்வு செய்த வடக்கு மண்டல ஐஜி செந்தாமரை கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி, ஆகியோர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்த பிறகு தனக்கு மீண்டும் சென்னை கமிஷனர் பதவி கிடைக்கும் என்று கமிஷனர் ஜார்ஜ் முயற்சித்து வந்தார்.
ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சில நாட்கள் விடுப்பை தவிர ஜார்ஜ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதில் கமிஷனர் பதவி எதிர்பார்த்திருந்த ஜார்ஜ் தீயணைப்பு துறை இயக்குனராக நியமிக்கபட்டார்.
சக்தி மிக்க அதிகாரியாக இருந்த ஜார்ஜ் வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் முக்கியவத்துவம் இல்லாத தீயணைப்பு துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
இதே போல் சென்னை நுண்ணறிவு பிரிவு கூடுதல் ஆணையர் பொறுப்பு வகித்தது வந்த தாமரைக்கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பொறுப்புக்கு தற்போது துணை ஆணையர் அளவிலான அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிரடி மாற்றங்கள் தொடரும் என தெரிகிறது.
மாற்றப்பட்ட அதிகாரிகள் அவர்கள் முன்பு வகித்த பொறுப்புகள் அடைப்பு குறிக்குள்...
1. ஜார்ஜ் (காத்திருப்போர் பட்டியல்) இயக்குநர் தீயணைப்புத்துறை 2. கே.பி.மகேந்திரன். (டிஜிபி. போலீஸ் ட்ரெயினிங்)டிஜிபி மின்வாரிய விஜிலென்ஸ். 3. ஆர்.சி.கொட்வாலா (ஏடிஜிபி. தீயணைப்புத்துறை) ஏடிஜிபி போலீஸ் ட்ரெயினிங் 4. எம்.சி.சாரங்கன் ( காத்திருப்போர் பட்டியல்) ஐஜி. அமலாக்கம் 5. தாமரைக்கண்ணன் ( கூடுதல் ஆணையர் .நுண்ணறிவு பிரிவு சென்னை ) ஐஜி .குற்றப்பிரிவு சி.ஐ.டி. சென்னை 6. செந்தாமரை கண்ணன் (காத்திருப்போர் பட்டியல்) ஐஜி. தொழில்நுட்ப பிரிவு. 7. பிரேமானந்த் சின்ஹா(காத்திருப்போர் பட்டியல்) இணை ஆணையர் போக்குவரத்து காவல்.வடக்கு 8. ஜோஷி நிர்மல்குமார் (காத்திருப்போர் பட்டியல்).டி.ஐ.ஜி உளவுப்பிரிவு சி.ஐ.டி சென்னை. 9. ஜெயகுமார் (காத்திருப்போர் பட்டியல்) எஸ்.பி. விழுப்புரம். 10. செல்வகுமார் (காத்திருப்போர் பட்டியல்) துணை ஆணையர் , பூக்கடை. 11. முத்தரசி. ( காத்திருப்போர் பட்டியல்) உதவி.ஐ.ஜி . நிர்வாகம் சென்னை டிஜிபி ). 12 .திருநாவுக்கரசு (உதவி.ஐ.ஜி . நிர்வாகம் சென்னை டிஜிபி அலுவலகம்) துணை ஆணையர் நுண்ணறிவு பிரிவு . 1 . சென்னை ஆணையர் அலுவலகம். 13. விக்ரமன் ( எஸ்.பி. நெல்லை ) எஸ்.பி. கியூ.பிரிவு சி.ஐ.டி.சென்னை 14. Dr.அருண் சக்தி குமார் ( துணை ஆணையர், மதுரை ) எஸ்.பி.நெல்லை. 15. சிபி சக்ரவர்த்தி (எஸ்.பி.சிறப்பு அதிரடிப்படை .ஈரோடு ) எஸ்.பி.திருவள்ளூர். 16. அர.அருளரசு ( எஸ்பி. சிறப்பு பிரிவு எஸ்.பி.சி.ஐ.டி. சென்னை ) எஸ்.பி.நாமக்கல் 17. ஓம் பிரகாஷ் மீனா( கண்காணிப்பாளர், எஸ்.பி.சி.ஐ.டி. 3. சென்னை.) எஸ்.பி. ராமநாதபுரம். 18. தேஷ் முக் ஷேகர் சஞ்சய் ( எஸ்.பி.அமலாக்கம் , மதுரை ) எஸ்.பி. நாகை. 19. அருண் பாலகோபாலன் ( ஏ.எஸ்.பி. சிறப்பு அதிரடி ப்படை , ஈரோடு ) ஏ.எஸ்.பி. நாங்குநேரி சப்டிவிஷன் , நெல்லை.
