Edappadi opened new medical college and hospital in pudhukootai

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், புதுக்கோட்டையில் 231 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் புதுக்கோட்டை- தஞ்சை சாலையில் மச்சுவாடி என்ற இடத்தின் அருகே புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார்,

இந்நிலையில் இந்த புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் J.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.