Edappadi K Palanisamy govt fail on Law and order issue

ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பி.எஸ் புதிய முதல்வராக பொறுப்பேற்றப்பின் ஜல்லிக்கட்டு பிரச்சனையை கையாண்டவிதம் சற்று தாமதமானாலும் அதை முடிவு வரவேற்கத்தக்கவகையில் அமைந்தது. இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டது ஆட்சியிலிருந்து இறங்கினார்.

அடுத்து, ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதும் அதன் பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி தலைமையிலான அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலை விரித்து ஆடத்தொடங்கியது. 

தற்போது தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக பல சான்றுகளை கூறலாம். திருச்சி மாணவர்கள் போராட்டம் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் விதவிதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் தமிழகத்தில் போராட்டம் நடத்தினர். 

குறிப்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தை களைக்க முயன்ற போலீசார் மாணவர்களின் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதே போன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் போலீசார் அத்துமீறி நடந்துக் கொண்டனர்.

இதையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற இயக்குனர் கௌதமன் கைது செய்யப்பட்டார். இது போன்ற பல நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இன்று, திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுகடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது ஏடிஎஸ்பி வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லாத நிலை உருவாகியுள்ளதற்கு உதாரணமாக தமிழக விவசாயிகள் நாட்டின் தலைநகரான டெல்லியில் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எந்தஒரு நடவடிக்கையும் எடுக்காதது எடப்பாடி அரசு மீதான அதிருப்தி சற்று அதிகமாகவே உள்ளது.

முதல்வராக பதவியேற்றதும் முதல்முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தார் ஆனால் மோடியோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுப்பது எடப்பாடி அரசுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு.

பிரதமரை சந்தித்த முதல்வர், 'நீட் தேர்வுக்கு என்ன சொன்னார்? ஹைட்ரோ கார்பனுக்கு என்ன சொன்னார்? என்பது பற்றியாவது எடப்பாடி மக்களிடம் விளக்கினாரா? இந்த அரசாங்கம் எதையும் தடுக்கப் போவதில்லை. மக்களின் குறிப்பறிந்து சேவை செய்வதுதான் உண்மையான அரசாங்கமாக இருக்க முடியும். இந்த அரசு ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் மண்ணைக் கவ்விக்கொண்டிருக்கிறது.

இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக தான் அனைவரும் கருதுகின்றனர்.