71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ்  கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக கொடி ஏற்றி வைத்தார்.

நாடு முழுவதும்  சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி  தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை நகரில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு மட்டும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதன்முறையாக கோட்டையில் கொடி ஏற்றி வைத்தார்.பின்னர் வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கான, கல்பனா சாவ்லா விருது, சிறந்த விவசாயிகளுக்கான விருது உட்பட, பல்வேறு விருதுகளை, முதல்வர் வழங்கினார்.விழாவை ஒட்டி, கோட்டையை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.