Ecraja audio sounding board Uruvapommai combustion Sonia spoke about the abuse
எச்.ராஜாவின் ஆடியோவில், சோனியாகாந்தி பற்றி தவறாக விமர்சனம் செய்திருப்பதால் அவரின் உருவபொம்மையை எரித்தும், காலால் மிதித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எச்.ராஜா பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி இழிவாக பேசியிருந்தார். அதேபோன்று அந்த ஆடியோவில் சோனியா காந்தி பற்றியும் தவறாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியினர் அதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டமாக கலந்து கொண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி தவறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது எச்.ராஜா உருவ படத்திற்கு தீவைத்து எரித்தனர். உடனே காவலாளர்கள் விரைந்து சென்று கட்சி நிர்வாகிகளிடம் இருந்த எச்.ராஜா உருவ படத்தை கைப்பற்றி தீயை அணைத்தனர்.
இருப்பினும், உடனே, ஒரு சிலர் வேறொரு படத்தை கொண்டுவந்து, அதனை காலால் மிதித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சோனியாகாந்தி பற்றி தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது பா.ஜ.க. தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
அதேபோன்று, சோனியாகாந்தி பற்றி தவறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து செஞ்சி கூட்டுசாலையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்புக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரங்கபூபதி தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எச்.ராஜாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவரது உருவபொம்மையும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரணி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் தினகரன், மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், வட்டார தலைவர்கள் சரவணன், முருகன், நகர தலைவர் சரசரவணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் முருகானந்தம், வழக்கறிஞர் தனஞ்செழியன், நிர்வாகிகள் ராஜா, மாரியப்பன், ஏழுமலை உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
.
