தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்து கொண்டு இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில், திருச்சியில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த விவசாயிகள் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.