Earth quake : கரூர் மற்றும் நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பீதியில் மக்கள்..

கரூர் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு, மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

 

Earth quake in karur and namakkal today

இன்று காலை  கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கரூரில் ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, லைட் ஹவுஸ் கார்னர், கருப்புக்கவுண்டன் புதூர் பகுதிகளில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. கரூர் நகர பகுதியில் உள்ள உணவகத்தில் உள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்தது. 

Earth quake in karur and namakkal today

இதனால் மக்கள் இயல்புக்கு மாறாக பூமி குலுங்கியதால், மக்கள் மிகவும் பயந்து வீடுகளை விட்டு அலறடித்துக்கொண்டு பொதுமக்கள் வெளியே வந்தனர்.  கரூரில் மட்டுமில்லாமல் அருகே உள்ள மாவட்டமான நாமக்கல்லில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கிறது. இதேபோல் நாமக்கல்லில் திடீரென பலத்த சப்தத்துடன் கட்டிடங்கள் குளிங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

Earth quake in karur and namakkal today

பயங்கர சப்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனால் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்றுவிட்டதாகவும் அச்சத்தோடு மக்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தின் மையப்பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு சம்பவங்கள் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இன்று இந்தோனேஷியாவில் 7.6 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios