தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்த அவர், கிரிவலம் சென்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று மாலை 6.30 மணிக்கு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்கு அருணாசலேஸ்வரர், உண்ணமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளை வணங்கி, நவக்கிரக சன்னதியில் நெய் தீபமேற்றி வழிபட்டார்.

பின் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர், பக்தர்களோடு கலந்து இரவு முழுவதும் மலையை சுற்றி 14 கி.மீ., தூரம் கிரிவலம் நடந்து சென்றார். அவருடன், 4 பெண்கள் மட்டும் இருந்தனர்.