Due to wrong supply by robo one person killed in omr
சென்னை ஒஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் ரோபோ மூலம் உணவு பரிமாறப்பட்டு வருகிறது. அதில் ஒரு ரோபோ தவறுதலாக உணவு பரிமாறிய விவகாரத்தில் ஓட்டல் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
சென்னை ஒஎம்ஆர் சாலையில் உள்ள ஒரு பிரமாண்ட ஓட்டலில் ரோபோ மூலம் உணவு சப்ளை செய்யப்படுகிறது.

ரோபோ உபசரிக்க என்பதால், பொதுமக்கள் அதிக ஆவலாக அந்த ஓட்டலுக்கு ஒரு முறையாவது சென்று உணவு அருந்த வேண்டும் என பலரும் அங்கு செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு, வாடிக்கையாளர் ஒருவர் சூப் ஆர்டர் செய்து உள்ளார். ஆனால் அவருக்கு தவறுதலாக பிரைடு ரைஸ் வழங்கப்பட்டு உள்ளது. தவறான கமெண்ட்ஸ் மூலம் ரோபோவை தவறுதலாக பரிமாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் கோபம் அடைந்த வாடிக்கையாளர், அங்குள்ள ஊழியர்களிடம் சண்டையிட்டு உள்ளார்.
இந்த ஓட்டலில் ஈனோஸ்ராய் மேற்பார்வையாளராகவும், சப்ளையராகவும் இருக்கிறார். அதே ஹோட்டலில் அனில்குரனும் சீனியர் சப்ளையராக இருக்கிறார்.

ரோபோ தவறுதலாக பரிமாறியதில் உள்குத்து உள்ளது என்ற தகராறில்
அனில்குரன், ஈனோஸ்ராயை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலி ஆகியுள்ளார். பின்னர் அணில் குரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு ரோபாவால், ஒரு மனிதனின் உயிரே போய்விட்டது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
