due to heavy rain 6 districe schools leave
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் மூன்று நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி, மின் இணைப்பு துண்டிப்பு என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் விடிய, விடிய லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது இந்நிலையில் மழை காரணமாக நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதே போன்று நாகை மாற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
