திருப்பூரில் அரசு பள்ளி ஒன்றில் பயிலும் +2 மாணவர்கள் மது அருந்தி பள்ளிக்கு வந்ததால், அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் தலைமையாசிரியர்.

திருப்பூரில் நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 

சுமார் 80 வருடங்களாக செயல்பட்டும் வரும் நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளி, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி சேவைக்கு மிக முக்கி பங்காற்றி வருகிறது.

ஆனால், இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். +2 பயிலும் மாணவர்கள் 5 பேர் மது அருந்திவிட்டு இன்று பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்களிடம், ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில், மாணவர்கள் மது அருந்தி வந்ததை உறுதி செய்தனர்.

பின்னர் அந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், சஸ்பெண்ட் செய்துள்ளார். மாணவர்கள் மது அருந்தி பள்ளிக்கு வந்தது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி முருகன், மாணவர்களின் பெற்றோர்களுடன் விசாரணை நடத்தி வருகிறார்.