drunk and drive in chennai adyar

சென்னை அடையாறு தினகரன் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி நடைபாதையில் சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அடையாறு டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் நள்ளிரவு 1 மணி அளவில் தனியார் உணவு விடுதில் பணி புரிந்துவரும் 4 பேர் வேலை முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியதில் 4 பேரும் படுகாயமடைந்தனர்.

வட மாநிலத்தை சேர்ந்த ராபின், பெஜ்சமின், அமித், கார்கின், என்ற அந்த நான்கு இளைஞர்களில் இரண்டு பேருக்கு கால் முறிவும் ஏற்ப்பட்டுள்ளது மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்து பொதிகை வளாகம் மதில் சுவர் மீதும் மோதியது. இதில் மதில் சுவர் இடிந்து விழுந்தது.. 

விபத்து ஏற்பட்டதும் 108 அவசர ஊர்த்திக்கு அழைத்து அரைமணி நேரம் கழித்தும் வரவில்லை என்பதால் , பிறகு ஆட்டோவில் அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். 

காரை ஒட்டிவந்தவர் ஐயப்பன் மது அருந்தி இருந்ததாகவும் அவருடன் வந்த ராஜா என்பவரும் மது போதையில் இருந்ததாகவும் காவல்துறை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

விபத்து ஏற்படுத்தியவர்களை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது ஜெ-5 சாஸ்திரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்..