தபாலில் மட்டுமே இனி ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும்!
ஓட்டுநர் உரிமங்கள், வாகன பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரச வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றுகள் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்து, வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை இயக்கிக்காட்டி, புகைப்படம், எடுத்துக்கொண்ட பின் அதில் உள்ள அதில் உள்ள முகவரிக்கு ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிப்பறி ஆசாமிகளால் உயிரிழந்த பெண்: இருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து போலீசார் விசாரணை!
தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திரும்ப வந்துவிடும். அதன்பிறகு, சரியான முகவரியுடைய தபால் உறையை விண்ணப்பத்தாரர்கள் தந்தால் மட்டுமே அந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் நேரில் அனுப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது