சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறையாக நிறுத்தப்படாததால் கடுப்பான ஓட்டுநர், தனது பேருந்தை குறுக்காக நிறுத்தி மற்ற பேருந்துகள் வெளியே செல்ல முடியாதபடி சாலையை மறைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பஸ்சை நிறுத்த இடம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஒரு அரசு பஸ் டிரைவர் பிற பஸ்கள் வெளியேறாத வகையில் வழியை அடைத்து பஸ்சை நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கம்புணரி பேருந்து நிலையம் போதிய இடம் இல்லாததால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பேருந்துகள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் மிகுந்த சிரமம் அடைகின்றன.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் முறையாக நிறுத்தப்படுவதும் இல்லை. இதனால் அவ்வப்போது அங்கு பிரச்சனை எழுந்தவண்ணம் உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று, பேருந்துகள் முறையாக நிறுத்தப்படாமல் கண்டயிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்ததை கண்ட ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய பேருந்தை வழியில் நிறுத்தினார். இதனால், மற்ற பேருந்துகள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த பேருராட்சி அதிகாரி அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வழியை அடைத்துக் கொண்டு நின்ற அரசு பேருந்தை எடுத்துச் செல்லுமாறு ஓட்டுநரிடம் கூறினார். இதனையடுத்து அங்கிருந்து அந்த பஸ் அங்கிருந்து நகர்ந்து சென்றது.
பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக நிறுத்த வேண்டும். இது அரசு, தனியார் பேருந்து என அனைத்துக்கும் பொருந்தும்.
இதை மீறி பேருந்துகளை பிற பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படும்படி நிறுத்தினால் அந்த பேருந்துகள் நிலையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று அதிகாரி எச்சரித்தார்.
சிங்கம்புணரி பேருந்து நிலைய இட நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் அந்த நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
