தென் மேற்கு பருவமழை,வட கிழக்கு பருவ மழையில் போதிய மழை பொழியாததாலும் வரும் கோடை காலத்தில் தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதை தவிர்க்க, ஆந்திராவிடம் இருந்து, கூடுதலாக, கிருஷ்ணா நீர் பெற ஆந்திரா முதல்வர், சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நேரடியாக விஜயவாடா சென்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு நடத்தினார். 'தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை, தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும்.

கிருஷ்ணா நீர் கிடைத்தால் மட்டுமே, சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஏப்ரல் வரை தொடர்ச்சியாக, 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்' என, பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில், போதிய நீர் இருப்பு இல்லாததால் 2.5 டி.எம்.சி., மட்டும் உடனடியாக வழங்குவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார்.கடந்த 9ம் தேதி திங்கள் கிழமை கண்டலேறு அணையில் 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

நேற்று இரவு ஜீரோ பாயிண்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. ஜீரோ பாயிண்டிற்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்த்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் கிருஷ்ணா நதி நீரை மலர் தூவி வரவேற்க அனைத்து ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் அதிமுகவினர் தடல்புடலாக செய்திருந்தனர். ஆனால் தமிழக விவசாயிக்கும் தமிழக பொதுப்பணிதுறை அதிகாரிகளுக்கு பெருத்த ஏமாற்றம் காத்து இருந்தது. திறந்து விட்டப்பட்ட தண்ணீர் காணமால் போனது.

தமிழக அதிகாரிகள் ஆந்திராவிடம் தண்ணீர் கேட்டார்கள் ஆந்திரா அரசு முடியாது என்றது. பின்பு தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நேரடியாக வந்து கேட்டார் தற்போது 4 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட முடியாது 2.5 மட்டும் தான் திறக்க முடியும் அதையும் திறந்து விட்டோம் அதை நீங்களும் பார்த்தீர்கள் நாங்களும் பார்தோம் தற்போது தண்ணீர் வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என வழக்கம் போல் கையை விரித்தார்கள் ஆந்திரா அதிகாரிகள்,

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் வரை 152 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா நதி கால்வாயில் ஓரங்களில் 800க்கும் மேற்பட்ட பகுதிகளில் மதகுகள் உள்ளன.ஆரம்பத்தில் மதகு பழுது காரணமாக தண்ணீர் வர தாமதமாகியது என்றார்கள் ஆந்திரா அதிகாரிகள் தற்போது விவசாயிகள் எடுத்துவிட்டார் நாங்கள் என்ன செய்ய முடியும் சர்வசாரணமாக கூறி வருகின்றனர்., இதனையடுத்து தமிழக பொதுப்பணித்துறை தண்ணீரை மீண்டும் பெற ஆந்திரா விரைந்துள்ளனர்.