“நாங்க போவோம்..இல்லைனா இங்கயே படுத்துகிடப்போம்..” பொதுமக்களை ‘டார்ச்சர்’ செய்த குடிமகன் !
மதுபோதையில் சாலையின் நடுவில் படுத்து உறங்கிய குடிமகனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. நேற்று இரவு அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவென்றால், குடிமகன் ஒருவர் மதுபோதையில் சாலையில் படுத்து பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் டார்ச்சர் செய்ததுதான்.மருத்துவமனை அருகே உள்ள சாலையின் நடுவில் குடிமகன் ஒருவர் மதுபோதையில் சாலையில் கைகளையும், கால்களையும் பரப்பிய படி படுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, அந்த பகுதியில் சென்றவர்கள் அவரை சாலையின் ஓரத்தில் அழைத்துவந்த நிலையில் மீண்டும் போதை மயக்கத்தில் சாலையிலயே படுத்து உறங்கினார். இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்துநிலையம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ச்சியாக 100மீ ட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து அரசு மதுபானகடைகள் அமைந்துள்ளதால், இரவுநேரங்களில் மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு இடையூறு செய்வதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக புகார் கூறுகிறார்கள்.
கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேலாக சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய மதுப்பிரியரை அங்கிருந்தவர்கள் ஓரமாக செல்ல அறிவுறுத்தியும் அவர் எழுந்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் வந்தும் அந்த குடிமகன் எழவில்லை. பல மணி நேரம் கழித்து, போதை தெளிந்தவுடன் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.