drinkers asking when will be the shops opening

ஆர்கே நகர் இடைத் தேர்தலையொட்டி 4 நாட்களுக்கு தொடர்ந் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், குடிமகன்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதுடன், வேதனையும் அடைந்தனர்.

இதுபோதாத குறைக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைக்கு விடுப்பு விடப்பட்டது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையொட்டி கடந்த சனிக்கிழமை ரேஷன் கடையைவிட மோசமான அளவில் வரிசையில் நின்று சரக்கு பாட்டில்களை வாங்கி, பதுக்கி வைத்து கொண்டனர். சில இடங்களில், கூடுதலாக பணம் கொடுத்து, பிளாக்கில் வாங்கியும் சந்தோஷமாக குடித்தனர்.

இந்நிலையில், ஆர்கே நகர் இடைத் தேர்தல் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கான விடுமுறையும் ரத்து செய்யப்படுமா...? என்ற அரசின் அறிவிப்புக்காக குடிமகன்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.