மறைந்த முதல்வர் ஜெயலலிதா செப்.22 மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே பிணமாகத்தான் கொண்டுவரப்பட்டார் , நான் அப்போலோ டாக்டர் ,என்று தீபா ஆதரவு கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய பெண் டாக்டர் ராம சீதா எனபவரை சைகர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.22 அன்று உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் டிச.5 அன்று மரணமடைந்தார். 

இடையில் அவரைப்பற்றிய மருத்துவ அறிக்கைகளை அப்போலோ நிர்வாகம் வெளியிட்டு வந்தது. லண்டன் மருத்துவர் டாக்டர் ரிச்சர்டு நேரில் வந்து சிகிச்சை அளித்தார் . இதற்கிடையே ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. 

விசாரணை கமிஷன் வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் , தான் அப்போலோ மருத்துவர் என்றும் ஜெயலலிதா அப்போலோ கொண்டுவரும் போது தான் அங்கு டூட்டியில் இருந்ததாகவும் அப்போது அவர் பிணமாகத்தான் கொண்டுவரப்பட்டார் என தீபா ஆதரவு கூட்டத்தில் பேசிய பெண் ஒருவர் பரபரப்பு புகாரை கூறினார்.

அவரது புகார் வாட்ஸப் உள்ளிட்ட வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெ.தீபா பேரவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை அந்த அம்மா ஒரு வக்கீல் மூலம் வந்தார் , அவர் தீபாவை சந்திக்க வேண்டும் என்றார். ஆனால் தீபா மறுத்துவிட்டார் என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் டைரகடர் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் டாகடர் சத்யபாமா ராம சீதா என்பவர் எங்களிடம் வேலை செய்ய வில்லை , அவர் டாக்டரே அல்ல என்று கூறி இருந்தார். அவர் மீது அப்போலோ மருத்துவமனி நிர்வாகம் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.

 இந்நிலையில் ராம சீதா சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பிரிவு 419 (ஆள்மாறாட்டம்) , 153( பொது அமைதிக்கு குந்தகம விளைவிக்கும் வகையில் பேசுதல்) , 505 (வதந்தி பரப்புதல் ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராமசீதா ஓபிஎஸ்சை சந்திக்கவும் முயன்றுள்ளார்.

ராமசீதா பளிசிட்டி விரும்புகிற மனோநிலை கொண்டவர் என அவரை அறிந்தவர் கூறுகின்றனர். அவரது கணவர் சத்திய நாராயணன் ஃபுட் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ராமசீதாவும் அலோபதி மருத்துவர் அல்ல அவர் ஒரு நியூட்ரீஷியன் தான் மருத்துவர் அல்ல என்கின்றனர். 

பொது மக்களிடையே பிரபலம் ஆகவேண்டும் என்று பெரிய தலைவரைன் மரணத்தில் ஏற்கனவே சர்ச்சை உள்ள நிலையில் நாமும் கொஞ்சம் கொளுத்தி போடுவோம் என்று புறப்பட்ட ராமசீதா தற்போது கைதாகியுள்ளார். விரைவில் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.