dr balaji says that he get 5 lakh for richard

வருமான வரி துறையினர், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களில்,ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்று தந்த டாக்டர் பாலாஜிக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெற்றது.

அந்த தேர்தலில், கட்சியின் சின்னத்தை பெறுவதற்காக, பொது செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து பெற வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று, ஜெயலலிதாவின் கை ரேகை பெறப்பட்டது.

டாக்டர் பாலாஜி, அந்த கை ரேகையை பெற்று தந்தார். அதற்காக, 5 லட்ச ரூபாய் அவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் பாலாஜி அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து, 5 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டது உண்மைதான். ஆனால்,டாக்டர், பீலே சென்னை வந்த பொது, அவர் தங்கும் ஹோட்டல் செலவுக்காக அது கொடுக்கப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அப்படி என்றால், டாக்டர் பீலே சென்னை வந்து தங்கியதற்கு, மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில்,ஹோட்டல் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

அல்லது, சுகாதாரத்துறை சார்பில் செலுத்தி இருக்கவேண்டும். அப்படி இல்லாமல், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து 5 லட்ச ரூபாய் பெற்று எதற்காக செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், அந்த 5 லட்ச ரூபாய்க்கான வருவாய் மூலத்தை தெரிவிக்க வேண்டும் என்பதால், இந்த விவகாரம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், டாக்டர் பாலாஜிக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.