dont do do this for tomorrow chandira giraganam
நாளை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளதால்,குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயுற்றவர்கள் என அனைவரும் கிரகணம் விட்டபிறகு குளித்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்...
சந்திர கிரகணத்தின் போது, அதனுடைய கதிர் கர்ப்பிணி பெண்கள் மீது பட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்பதால்,வீட்டை விட்டு நாளை வெளியே வராமல் இருப்பது நல்லது

ஹோமங்கள் செய்வது மிகவும் பலம்
நாளைய தினம் மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரையிலான முழு சந்திரகிரகண வேளையில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும்.

அதாவது நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் என்பது ஐதீகம்

கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. (கிரகணத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் சாப்பிட வேண்டும் ) குளித்து விட்டு சாப்பிட வேண்டும்...

தர்ப்பணம் செய்வது நல்லது
கிரகணம் முடியும் போது,தர்ப்பணம் செய்தால், புண்ணியம் வந்து சேருமாம்
சந்திர கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள்
புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி.இந்த நட்சத்திரம் கொண்டவர்கள் தர்ப்பணம் செய்வது நல்லது
மேலும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதே போன்று கிரகணத்தின் போது தவம் செய்தல், தியானம் செய்தல் இது போன்ற ஏதாவது ஒன்றை செய்யலாம்.
விஷ்ணு சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும் என்பது குறிப்பிடத்தக்கது
தானம் செய்யுங்கள்
கிரகண வேளையின் போது, கோவில்கள் கதவு மூடப் பட்டிருக்கும், முடிந்த பிறகு நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யபடும். அப்போது கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது.
அந்த வேளையில்,வீட்டில் விளக்கேற்றி விட்டு கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது

அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும் என்பது ஐதீகம் .
