Asianet News TamilAsianet News Tamil

பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் - மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு...

docters protest withdraw in tamilnadu association announcement
docters protest-withdraw-in-tamilnadu-association-annou
Author
First Published May 5, 2017, 7:53 PM IST


பேச்சுவார்த்தையை தொடர்ந்து மருத்துவ மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டை ரத்தை தடை செய்யகோரி 17 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக  மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.

மருத்துவ மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீடு ரத்தை தடை செய்து உத்தரவிட்டகோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.

மேலும் நீதிமன்றத்தின் பரிந்துரையை மருத்துவர்கள் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்த பேச்சுவார்த்தை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மருத்துவர்களின் கோரிக்கையும் தமிழக அரசின் கோரிக்கையும் ஒன்றுதான் எனவும், மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவர் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, நீதிமன்றங்கள் தங்களுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக அரசும் தங்களது கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்துள்ளது. இதனால் இந்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என அறிவித்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios