ஈரோடு

குடிக்க தண்ணீர் தரமுடியாத அரசுக்கு 8 வழிச் சாலையும், புல்லட் இரயிலும் தேவையா? என்று தா.பாண்டியன் கேள்வி கேட்டுள்ளார்.

"ஊழல் நிறைந்த மாநிலம்" என அமித்ஷா கூறியிருக்கிறார். அவர் கண்ணாடியின் முன் நின்று தன்னை பார்த்தே சொல்லிக் கொள்ளட்டும். அவரது மகன் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பது தெரியும். இரண்டு ஆண்டுகளில் 16 ஆயிரம் மடங்கு சொத்து சேர்த்துள்ளார். அவர் சொன்னதை வைத்து தமிழகத்தில் ஊழல் உள்ளதா? என்று சொல்ல தேவையில்லை.

"கல்வி வளர்ச்சி நாள்" என்று கூறி, ஞாயிற்றுக் கிழமையன்று பள்ளிக் கூடத்துக்கு மாணவர்களை வரவழைத்துவிட்டு அரசாணை வரவில்லை என்று திருப்பி அனுப்பியது நிர்வாக முறைகளில் உள்ள குளறுபடிகள். முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.