நீலகிரி

சில்வர் ஓக் மரங்களை வெட்டக் கூடாது என்று கூடலூரில் அனைத்துக் கட்சி சார்ப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

டான் டீ நிறுவனத்துக்குச் சொந்தமான எஸ்டேட்டுகளில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டக் கூடாது என்று வலியுறுத்தி கூடலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில், கூடலூர், பந்தலூர் வட்டங்களிலுள்ள டான் டீ நிறுவனத்துக்குச் சொந்தமான எஸ்டேட்டுகளில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் விலையுயர்ந்த ஈட்டி உள்ளிட்ட மரங்களையும் வெட்ட வாய்ப்புள்ளது. எனவே, இத்திட்டத்தை டான் டீ நிறுவனம் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,  திமுக மாவட்டச் செயலாளர் முபாரக்,  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோஷிபேபி, சளிவயல் ஷாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெள்ளி, நகரச் செயலாளர் குணசேகரன், ஏஐடியூசி தலைவர் டி.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.சகாதவேன்,  நிர்வாகி ராஜேந்திர பிரபு, முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி ஹனீபா, கே.பி.முகமது, மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் சாதிக் பாபு, முகமது மனு உள்ளிட்ட் ஏராளமானோர் பங்கேற்றனர்.