200 தொகுதிகளில் வெற்றி.! தொண்டர்களுக்கு இலக்கு நிர்ணயித்த திமுக
திமுக செயற்குழு கூட்டத்தில் பேரிடர் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தப்பட்டதுடன், டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக செயற்குழு கூட்டம்
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி கட்சி தான் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தல், இரண்டு நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வரும் திமுக அணி, வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தற்போதே களம் இறங்கியுள்ளது. இந்த நிலையிலை திமுக மாநில செயற்கு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திமுக செயற்குழு தீர்மானம்:
பேரிடர் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் - தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு செயற்குழு கண்டனம். ஒன்றிய அரசு பேரிடர் நிதிஎன்பது பா.ஜ.க.வின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி - இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிட வேண்டும்.
“ஒரே நாடு - ஒரேதேர்தல்” மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகநாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு பதிவு செய்து - அதற்கு பணிந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு இந்தமசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுப்பியிருந்தாலும் - ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திணிக்க அறிமுகம்செய்யப்பட்டுள்ள இந்த மசாதாவை முழுமையாகக் கைவிடவேண்டும்
அதிமுகவின் இரட்டை வேடம்
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்தஅதிமுகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொருசட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிமஏலம் விட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும் போடும் கபடநாடகத்திற்கு திமுக செயற்குழு கண்டனம்!
சட்ட திருத்தம் மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்குவந்த போது, “அதிமுக இந்த மசோதாவை ஆதரிக்கிறது” (Our ADMK Party Supporting this bill) என்றும், “இச்சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ள துறைஅமைச்சரை பாராட்டுகிறேன்” (Appreciate the Honble Minister for having brought up this bill) என்றும் டங்ஸ்டன்கனிம ஏல முறையை ஆதரித்து மாநிலங்களவையில்பேசியதும், வாக்களித்ததும் அதிமுக.
“டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக்கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும்” “அப்படி பறித்துக்கொள்ள வாக்களித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம்செய்த அதிமுகவும்” கைகோத்துக் கொண்டு உருவாக்கியடங்ஸ்டன் பிரச்சினையை மறைத்து கபட நாடகம் போடும்அதிமுகவிற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
200 இடங்களில் வெற்றி
தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத பிற ஆதிக்ககலாச்சாரங்களை முறியடிக்கும் முறையிலும் தை முதல்நாளன்று தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளைத் தமிழர்பண்பாட்டுத் திருநாளாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றிஉலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவப்பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்குரியகலை-இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள்ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தைநிலைநாட்டிட வேண்டும்
2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் 200 இடங்களில் - 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சிவருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர் என்று கழக உடன்பிறப்புகளைஇச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.