Asianet News TamilAsianet News Tamil

சூறாவளி பிரச்சாரத்துக்கு ரெடியான ஸ்டாலின்! சுற்றுப்பயண அட்டவணை வெளியிட்ட திமுக!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 23 முதல் ஏப்ரல் 17 வரை வாக்குச் சேகரிக்க உள்ளார்.

DMK releases MK Stalin's Lok Sabha election campaign schedule sgb
Author
First Published Mar 20, 2024, 8:31 PM IST

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண அட்டவணையை கட்சியின் தலைமைக் கழகமான அண்ணா அறிவாயம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரத்திற்கு ஆயத்தமாகியுள்ளன. இந்நிலையில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திமுக முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

நாங்குநேரி டாஸ்மாக் கடையில் பூச்சி விழுந்த சரக்கு! கொந்தளிக்கும் குடிகாரர்கள்!

தேதி மற்றும் தொகுதி வாரியாக திமுக வெளியிட்ட முதல்வரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத் திட்டம் பின்வருமாறு:

மார்ச் 22 - திருச்சி, பெரும்பலூர்

மார்ச் 23 - தஞ்சை, நாகை

மார்ச் 25 -  கன்னியாகுமரி, திருநெல்வேலி

மார்ச் 26 - தூத்துக்குடி, இராமநாதபுரம்

மார்ச் 27 - தென்காசி, விருதுநகர்

மார்ச் 29 - தர்மபுரி, கிருஷ்ணகிரி

மார்ச் 30 - சேலம், கிருஷ்ணகிரி

மார்ச் 31 - ஈரோடு, நாமக்கல், கரூர்

ஏப்ரல் 2 - வேலூர், அரக்கோணம்

ஏப்ரல் 3 - திருவண்ணாமலை, ஆரணி

ஏப்ரல் 5 - கடலூர், விழுப்புரம்

ஏப்ரல் 6 - சிதம்பரம், மயிலாடுதுறை

ஏப்ரல் 7 - புதுச்சேரி

ஏப்ரல் 9 - மதுரை, சிவகங்கை

ஏப்ரல் 10 - தேனி, திண்டுக்கல்

ஏப்ரல் 12 - திருப்பூர், நீலகிரி

ஏப்ரல் 13 - கோவை, பொள்ளாச்சி

ஏப்ரல் 15 - திருவள்ளூர், வடசென்னை

ஏப்ரல் 16 - காஞ்சிபுரம், திருபெரும்புதூர்

ஏப்ரல் 17 - தென்சென்னை, மத்திய சென்னை

முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காதலி ஏமாற்றி கழட்டிவிடப் பார்க்கிறாரா... இதை செஞ்சு பிரேக்அப் ஆகாம பாத்துங்கோங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios