Asianet News TamilAsianet News Tamil

"எண்ணூர் துறைமுகத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு" - திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

dmk protest against privatisation of ennore port
dmk protest against privatisation of ennore port
Author
First Published Jul 15, 2017, 12:04 PM IST


சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்கு ஆதரவு தரும் தமிழக அரசைக் கண்டித்தும் எண்ணூர் துறைமுகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் கடந்த 2001ம் ஆண்டு கருணாநிதியின் தலைமையில், 3000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி ரூ.15,000 கோடி மதிப்புள்ள, அன்றைய பிரதமரால் திறக்கப்பட்டு, இன்று வரை லாபத்தோடு இயங்கி வருகிறது.

dmk protest against privatisation of ennore port

இந்நிலையில், மத்திய அரசு, இந்த  துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் நோக்கில் சில நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசும் மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. இதனால், 100க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 15,000க்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களும் வேலை இழப்பார்கள். அரசுக்கும் ரூ.1,05,000 கோடி இழப்பு ஏற்படும்.

இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்திடவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் , எண்ணூர் காமராஜர் துறைமுகம் நுழைவாயில், காட்டுப்பள்ளியில்   இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்ததது.

அதன்படி திமுக  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  துறைமுக நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
 

Follow Us:
Download App:
  • android
  • ios