திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ. இவரது மகன் ராகேஷ். 22 வயதான இவர், சென்னையில் இருந்து தனது நண்பர் வேதவிகாஷீடன் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார். காரை ராகேஷ் ஓட்டி வந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதை அடுத்து விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே, கார் சாலையின் செண்டர் மீடியன் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரது நண்பர் வேதவிகாஷ், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுக்குறித்து தகவலறிந்த கோட்டகுப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக,திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.