DMK leader Karunanidhi visit to MK Azhagiri

திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு மு.க.அழகிரி வருகை தந்துள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அவரது மகன் மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை கோபாலபுரத்திற்கு வந்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை தற்போது மோசமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வருகிறார். சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது என காவேரி மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள், நேற்று இரவோடு இரவாக அவரது வீட்டிற்கு படையெடுத்தனர். கோபாலபுரம் பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சென்னை கோபாலபுரத்தில் வருகை தந்துள்ளார்.