DMK leader Karunanidhi health Sampath interview

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை திமுக தலைவர் கருணாநிதி அவரின் உடல்நலம் குன்றியிருப்பதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒருவாரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் 4–வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள அரசியல் தலைவர் வந்த வண்ணம் உள்ளனர். இன்று மருத்துவமனைக்கு வருகை தந்த நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார். 

அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை திமுக தலைவர் கருணாநிதி என கூறினார். மேலும் அவரின் உடல்நலம் குன்றியிருப்பதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என்று நாஞ்சில் சம்பத் பேட்டியளித்துள்ளார்.