தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்அவருக்கு வயது 87.
Add Asianetnews Tamil as a Preferred Source

கோ.சி.மணியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். தஞ்சையை சார்ந்த கோ.சி.மணி 1968 முதல் 1980 வரை 12 ஆண்டுகள் தமிழக சட்டமேலவை உறுப்பினராக பதவி வகித்தார். தமிழக சட்டமேலவையின் எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தின் திமுக செயலராக நீண்ட காலம் பதவி வகித்தார். 1989 முதல் 1991 வரை மற்றும் 1996 முதல் 2001 வரை ஆகிய காலங்களில் திமுக அவையில் அமைச்சராக இருந்தார். உள்ளாட்சி துறை, விவசாயத்துறை, கூட்டுறவுத்துறைகளின் அமைச்சராக இருந்தார்.
வயது முதிர்ச்சியின் காரணமாகவும் ,உடல்நலக்குறைவாலும் அவதிப்பட்டுவந்த கோ.சி.மணி தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.
