திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இதற்கு எல்லாம் இந்த புகைப்படம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி கருணாநிதியை சந்தித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று மாலை 4.15 மணி அளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை துணை  குடியரத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்த ராகுல்காந்தி, கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது என்றார்.  காங்கிரஸ் கட்சிக்கும், அவருக்கும் இடையிலான நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை தான் சந்தித்ததாகவும் ராகுல் கூறியுள்ளார். 

கருணாநிதியுடன் துணை நிற்க விரும்புகிறேன். மேலும் உறுதியானவர் திமுக தலைவர் கருணாநிதி என்று ராகுல் தெரிவித்துள்ளார். கருணாநிதி தமிழ் மக்களின் உணர்வாக விளங்குகிறார். கருணாநிதி உடல்நிலை சீராவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி குணமடைய சோனியா காந்தி விசாரித்ததை தெரிவித்தேன் என ராகுல் பேட்டியளித்துள்ளார்.