dmk cadre attacked in government office
வரி செலுத்த வந்த நபரை, பேரூராட்சி ஊழியர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு ஆளான நபரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் கடந் 27 ஆம் தேதி அன்று 25 கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது. கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது தொடர்பாக கமுதி பேரூராட்சி அலுவலகத்துக்கு திமுக பிரமுகர் கேசவன் சென்றுள்ளார். அப்போது அவர், குமரேசனிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேசவன், குமரேசனைத் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த மங்களநாத சேதுபதி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், கேசவனை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாது, கேசவன் தங்களைத் தாக்கியதாகவும் கமுதில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் கேசவனை கைது செய்தனர்.
இந்த நிலையில், போலீஸ் நிலையத்தில் கேசவன் புகார் ஒன்றை அளித்தார். அதில் வீட்டு வரி செலுத்த சென்ற என்னை, செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் சரமாரியாகத் தாக்கியதாக அதில் கூறியிருந்தார்.
கேசவனின் புகாரை அடுத்து, பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்கள் கேசவனை சரமாரியாகத் தாக்கியிருப்பது அதில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் குமரேசன், வரித்தண்டலர் மங்களநாத சேதுபதி மற்றும் ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
