Tamilnadu corona :தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு கொரோனா
கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கையில் உள்ளபோது மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 34 லட்சத்து 65 ஆயிரத்து 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 லட்சத்து 21 ஆயிரத்து 552 பேர் குணமாகி உள்ளனர். மொத்தம் 38 ஆயிரத்து 26 பேர் பலியாகி உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்
கட்டுப்பாடுகள் விதிப்பு
அலட்சியம் செய்யாமல் இருப்பதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்
காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு வீடுகளில் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மீண்டும் ஊரடங்கு ?
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தி வருவதால், மாநிலம் முழுதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
