District-level sports tournaments for recruiters are taking place today ...

நீலகிரி

உதகையில் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மன நலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் என நான்கு பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

இவர்களுக்கு இறகுப் பந்து, மேசைப் பந்து, தடகளம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி பந்தயம், அடாப்டெட் வாலிபால், நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், எறிபந்து, நீளம் தாண்டுதல், கபடி ஆகிய போட்டிகள் அண்ணா உள் விளையாட்டரங்கம், அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் நடத்தப்படுகின்றன.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒவ்வொரு போட்டியாளரும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றைக் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவர்.

தடகளப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிப் பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுடன் சான்றிதழும், குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறுவோருக்கு பதக்கத்துடன் சான்றிதழ்களும் வழங்கப்படும்.