மகனுக்கு பெருமை தேடித்தந்த தாய்.. பெருமிதத்தோடு அன்னைக்கு வாழ்த்து சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்!
வெற்றிமாறனின் தாய் மேகலா சித்ரவேல், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து தற்பொழுது அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் திரை உலகின் தற்போதைய சென்சேஷனல் இயக்குனர்களின் பட்டியலில் வெற்றிமாறன் நிச்சயம் இடம்பெற்றிருப்பர். தனது தனித்துவமான திரைப்படங்களுக்காக ரசிகர்களால் பெரிதளவு பாராட்டப்படும் ஒரு மிகச் சிறந்த இயக்குனராக அவர் திகழ்ந்து வருகிறார்.
தற்பொழுது தனது விடுதலை படத்தின் இரண்டாம் பாகப் பணிகளில் பிஸியாக இருக்கும் அவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடைய படங்களை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் தனது தாயால் மாபெரும் பெருமிதத்திற்கு தற்போது உள்ளாகி உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
வெற்றிமாறனின் தாய் மேகலா சித்ரவேல், முன்னாள் முதலமைச்சரும், பிரபல நடிகருமான எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து தற்பொழுது அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தாய் மேகலா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையால் விருது வாங்கியதை, முன் வரிசையில் அமர்ந்து பார்த்து ரசித்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
தன் மகன் வெற்றிமாறன் தன்னுடைய படிப்பிற்காக மிகப்பெரிய அளவில் உதவினார் என்றும், நான்கு ஆண்டுகளாக தனது படிப்புக்கு ஆகும் செலவுகள் மொத்தத்தையும் தனது மகனே பார்த்தார் என்றும் பெருமையோடு கூறினார் அவர். மகனின் ஊக்கமே தன்னை முனைவர் பட்டம் பெற வைத்தது என்றும் பெருமிதத்தோடு கூறியுள்ளார் மேகலா சித்ரவேல்.
வெற்றிமாறனின் தாய் மேகலா, "கமலி அண்ணி", "ரதிதேவி வண்டல்", "வசந்தமே வருக" உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : 32 நிலையங்களுடன் 39 கி.மீ.க்கு ஓடத்தயாராகும் கோவை மெட்ரோ ரயில்; 15ல் திட்ட அறிக்கை தாக்கல்